/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூனம்பட்டி ஆதீன மஹோத்சவம் சிவாலயங்களில் ஹோம பூஜை
/
கூனம்பட்டி ஆதீன மஹோத்சவம் சிவாலயங்களில் ஹோம பூஜை
ADDED : நவ 11, 2025 12:34 AM
திருப்பூர்: கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனத்தின் பஞ்சாஷத் மகர ஆதிரை ம ேஹாத்சவத்தை முன்னிட்டு, இன்று துவங்கி 15ம் தேதி வரை, சிறப்பு ேஹாம வழிபாடுகள் நடைபெற உள்ளன.
கூனம்பட்டி ஸ்ரீகல்யாணபுரி ஆதீனத்தில், 57 வது ஜகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளின், பஞ்சாஷத் மகர ஆதிரை ம ஹோத்சவ பொன்விழா, தை மாதம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, ருத்ரயாக பெருவிழா, ஸ்ரீபாசுபதாஸ்த்ர ேஹாமம், ஸ்ரீசுதர்ஸன மஹா யாகம் ஸ்ரீமுகம் வழிபாடுகள், இன்று துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இன்று காலை துவங்கி, நாளை மதியம் வரை, திருவாரூர் சிறுகுடியில் உள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீசூக் ஷமபுரீஸ்வரர் கோவில், 13 மற்றும் 14ம் தேதிகளில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீசுந்தகுஜாம்பிகை சமேத ஸ்ரீவீழிநாஸ்சுவாமி கோவில், 14 மற்றும் 15 ம் தேதிகளில், ஸ்ரீகஜேந்திரமோட்ச வரதராஜ பெருமாள் கோவில்களில், ேஹாம பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது.
வேத சிவாகம திருமுறை பாராயணங்களோடு அன்னதானமும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளில், பக்தர்கள் பங்கேற்று இறையருளும், குருவருளும் பெறலாம் என, ஸ்ரீகூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன விழாக்குழு அழைப்புவிடுத்துள்ளது.

