/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைத்தறி ஆடை அணிவகுப்பு; பிரமிக்க வைத்த மாணவியர்
/
கைத்தறி ஆடை அணிவகுப்பு; பிரமிக்க வைத்த மாணவியர்
ADDED : ஆக 06, 2025 12:33 AM

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி ஆடை வடிவமைப்புத்துறை சார்பில், துறை துவக்க விழா மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி நிர்மல்ராஜ், துறை தலைவர் ேஹமலதா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, ஆடை வடிவமைப்பாளர் விக்னேஷ் ராம், கோவை மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மேஹலா பங்கேற்றனர்.
ஆடை வடிவமைப்பு துறை மாணவிகள், கைத்தறி புடவைகளை, பல்வேறு விதமாக அணிந்து வந்து, வியப்பு ஏற்படுத்தினர். துறை பேராசிரியர்கள் மகேஷ்வரி, இளமதி, ஷர்மிளா ஒருங்கிணைத்தனர்.
மாணவி நிவேதா வெற்றி பெற்று, கோவையில் நடக்கும் இறுதிக்கட்ட போட்டியில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற, திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த சுப்ரமணியம் தலைமையில் சிவபாலன், மோகன்ராஜ், பாலு ஆகியோர் பங்கேற்று, ஆடை வடிவமைப்பு துறை ஆய்வகத்திற்காக, 5 தையல் இயந்திரங்களுக்கான தொகை, ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினர்.