/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
/
வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஆக 06, 2025 12:34 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கம், 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் நேற்றுமுன்தினம், ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன், கமிஷனர் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நேற்று நடைபெற இருந்த துாய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில், 'ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களுக்கு, பணிக்கொடை, சமூக பாதுகாப்பு, ஓய்வூதியம் வழங்குவது; கொரோனா காலத்தில் பணிபுரிந்தோருக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக அரசிடம் கலந்து ஆலோசிக்கப்படும்,' என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைப்படி சம்பளம் வழங்குவது குறித்து அரசிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாகிகள் கூறினர்.