/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகிழ்ச்சி.. இடம் மாறும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன்! 42 ஆண்டுக்கு பின் புதிய கட்டடம்
/
மகிழ்ச்சி.. இடம் மாறும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன்! 42 ஆண்டுக்கு பின் புதிய கட்டடம்
மகிழ்ச்சி.. இடம் மாறும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன்! 42 ஆண்டுக்கு பின் புதிய கட்டடம்
மகிழ்ச்சி.. இடம் மாறும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன்! 42 ஆண்டுக்கு பின் புதிய கட்டடம்
ADDED : அக் 02, 2024 06:40 AM

திருப்பூர் : திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக தற்காலிகமாக ஸ்டேஷன் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
திருப்பூர், தாராபுரம் ரோட்டில், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இந்த இடம் போலீஸ் துறைக்கு சொந்தமானது. நீண்ட காலமாக இந்த போலீஸ் ஸ்டேஷன் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. கட்டப்பட்டு நீண்ட காலமான நிலையில் அவ்வப்போது, இதில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதுள்ள கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய வளாகம் கட்டப்படவுள்ளது. இதற்காக போலீஸ் ஸ்டேஷன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், இதனை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர்.
இதற்காக, மத்திய பஸ் ஸ்டாண்டில், இட வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை கமிஷனர் சுந்தரராஜன், உதவி கமிஷனர் வினோத், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அசோக் கிரிஷ் யாதவ், உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் தற்காலிகமாக, செயல்படும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், செய்ய வேண்டிய ஏற்பாடுகள் ஆகியன குறித்தும் விரிவாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தபின், உடனடியாக தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்படும்.