/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹரித் வார் சிறப்பு ரயில் 24ல் புறப்படுகிறது
/
ஹரித் வார் சிறப்பு ரயில் 24ல் புறப்படுகிறது
ADDED : டிச 22, 2025 05:03 AM
திருப்பூர்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரயில் (எண்:06043) அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24-ம் தேதி காலை 11:15 க்கு கோவையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில், பாலக்காடு, ெஷாரனுார் வழியாக பயணத்தை தொடர்கிறது; 27ம் தேதி நள்ளிரவு, 12:05 ஹரித்வார் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக, டிச. 30ம் தேதி ஹரித்வாரில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06044) ஜன. 2 அதிகாலை, 3:00 மணிக்கு கோவை வந்தடைகிறது. முழுதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட ரயில் என்பதால், ரயிலில் பயணிக்க விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.
ரயில், கோவையில் இருந்து திருப்பூர் வழியாக இயக்கப்படாததால், ஹரித்வார் ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்து, கோவையில் இருந்து பயணத்தை தொடரலாம் என திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

