/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறந்து போனதா 'மாஸ் கிளீனிங்?' திருப்பூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்?
/
மறந்து போனதா 'மாஸ் கிளீனிங்?' திருப்பூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்?
மறந்து போனதா 'மாஸ் கிளீனிங்?' திருப்பூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்?
மறந்து போனதா 'மாஸ் கிளீனிங்?' திருப்பூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்?
ADDED : நவ 06, 2025 04:26 AM

திருப்பூர்: நகர, ஊரக உள்ளாட்சிகளில், சுகாதாரம் காக்கும் பணியின் ஒரு திட்டமான 'முழு சுகாதார இயக்கம்' எனப்படும், 'மாஸ் கிளீனிங்' பணியை திருப்பூரில் மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனை எழுந்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுகாதாரம் என்பது, பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
பெரும்பாலான நகர, ஊரக உள்ளாட்சிகளில் குப்பை கொட்டவும், அதை தரம் பிரித்து அகற்றுவதற்கு பிரத்யேக இடமில்லாததால், குப்பை மேலாண்மை செய்வதில் நகர, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி கொண்டிருக்கின்றன.
இதனால், சாலையோரம் மற்றும் கால்வாய்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கும் நிலையையும் ஆங்காங்கே பார்க்க முடியும்.
கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை மற்றும் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துாய்மைப் பணியாளர்கள் இல்லாததும், துாய்மைப்பணியில் பின்னடைவு ஏற்பட முக்கிய காரணம்.
இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க, 'முழு சுகாதார இயக்கம்' எனப்படும் 'மாஸ் கிளீனிங்' திட்டத்தை, மாவட்ட நிர்வாகங்கள் ஊக்குவிப்பது வழக்கம்.
அதாவது, அருகருகே உள்ள கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து, அந்த ஊராட்சிகளில் உள்ள துாய்மைப் பணியாளர்கள் அனைவரையும் ஒரு சேர, ஒரே ஊராட்சியில் துாய்மைப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்; தேங்கி யுள்ள குப்பைகளை அகற்ற 'பொக்லைன்' உள்ளிட்ட வாகனங்களையும், ஒரு சேர இப்பணியில் ஈடுபடுத்தும் போது, அந்த ஊராட்சி பகுதி முழுதும் சுத்தம், சுகாதாரம் மேம்படும்; சுத்தம் செய்யப்பட்ட இடத்தில், மீண்டும் குப்பைக் கொட்டாதவாறு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது; மீறி குப்பைக் கொட்டுவோர் மீது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுத்தம், சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி உட்பட, 265 கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளிலும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எனவே, மாதம் ஓரிரு முறை அருகருகே உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் முழு சுகாதாரப்பணி மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அன்னுார் உள்ளிட்ட இடங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 'மாஸ் கிளீனிங்' பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது, குறிப் பிடத்தக்கது.

