/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையப்பாளையம் 'குப்பையில்' குப்பை தொட்டி பொதுமக்கள் வேதனை
/
சந்தையப்பாளையம் 'குப்பையில்' குப்பை தொட்டி பொதுமக்கள் வேதனை
சந்தையப்பாளையம் 'குப்பையில்' குப்பை தொட்டி பொதுமக்கள் வேதனை
சந்தையப்பாளையம் 'குப்பையில்' குப்பை தொட்டி பொதுமக்கள் வேதனை
ADDED : நவ 06, 2025 04:27 AM

அவிநாசி:
குப்பை சேகரிக்கும் தொட்டியை, குப்பையில் போட்டு வைத்த அவலம் அவிநாசி அருகே அரங்கேறி உள்ளது.
சேவூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் துாய்மை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியில் ஆங்காங்கே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை போட்டு வைக்க பெரிய இரும்பு தொட்டிகள், தேவைப்படும் போது நகர்த்திச் செல்லும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், சந்தையப்பாளையம் செல்லும் இணைப்பு ரோட்டில் பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் உள்ள குப்பைத் தொட்டியை பயனற்ற நிலையில் ரோட்டின் ஓரமாக போட்டுள்ளனர்.
அத்தொட்டியில், செடி கொடிகள் படர்ந்து, துருப்பிடித்து 'காயலான்' கடைக்கும் போடும் வகையில் உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது வேதனைக்குரியது என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.