/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாச்சிபாளையம்: நடக்கக்கூட முடியாது அவல நிலையில் ரோடு
/
நாச்சிபாளையம்: நடக்கக்கூட முடியாது அவல நிலையில் ரோடு
நாச்சிபாளையம்: நடக்கக்கூட முடியாது அவல நிலையில் ரோடு
நாச்சிபாளையம்: நடக்கக்கூட முடியாது அவல நிலையில் ரோடு
ADDED : நவ 06, 2025 04:27 AM

பொங்கலூர்:
பொங்லுார் அருகே நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு ரோட்டில் நடக்க கூட முடியாத அளவுக்கு படுமோசமாக உள்ளது.
பொங்கலுார் அருகே நாச்சிபாளையம் ஊராட்சி பகுதியில், செந்தில் நகர், பகவதி நகர் என பல்வேறு நகர்கள் பெயரில் வீதிகள் உள்ளன. இவற்றில், நுாற்றுக்கணக்கான வீடுகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், பெரும்பாலோனோர் பனியன் நிறுவன தொழிலாளர்கள். இவர்கள் பணிக்காவும், இதர வேலைகளுக்காவும் பயன்படுத்தும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், ரோடு முழுவதும் குண்டும் குழியாக மாறி உள்ளது. இதனால், வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். நடந்து சென்றால் கூட தடுக்கி விழுந்து காயம் ஏற்படும் அவலமும் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தங்கள் பகுதிக்கு விரைவில், தார் ரோடு அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

