/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடுவாய்- சுடுகாடு தெரியாத அளவுக்கு முட்புதர்கள்
/
கொடுவாய்- சுடுகாடு தெரியாத அளவுக்கு முட்புதர்கள்
ADDED : நவ 06, 2025 04:28 AM

பொங்கலுார்:
கொடுவாய் பகுதியிலுள்ள சுடுகாட்டில் முன் மற்றும் பின் முட்புதர்கள் காடுபோல் வளர்ந்து, சுடுகாட்டை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
பொங்கலுார் ஒன்றியம், கொடுவாயில் உள்ள சுடுகாடு சந்தைக்கடை ரோடு ஓரம் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் என பெருகி உள்ளன. சுடுகாடு நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால், சுடுகாடே தெரியாத அளவுக்கு சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. அத்துடன் புதர் செடிகளும் வளர்ந்து வனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பாம்புகள் குடியிருப்பு பகுதியாக மாறி வருகிறது. அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் புகுந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, அங்குள்ள முற்புதர்களையும் சீமைக்கருவேல மரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

