ADDED : செப் 01, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
நுால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலையும் பாதிக்க செய்கிறது.
இக்கட்டான இந்நிலையில், தமிழ்நாடு பின்னலாடை வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. ‘நிட்மா’ சங்கம், திருப்பூர் சாய ஆலை உரிமயைாளர்கள் சங்கம், ‘டெக்பா’ சங்கம், திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழிற் கூட்டமைப்பு (டிப்), ‘டெக்மா’ சங்கம் உட்பட அனைத்து தொழில் அமைப்பினரும், முன்னணி தொழிற்சங்கங்களும் தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனால், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு நல்ல காலம் பிறக்கும்; எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், உடனுக்குடன் தீர்வு காண முடியும் என்றும் வரவேற்றுள்ளனர்.
