/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.35 லட்சத்தில் சுகாதார நிலையம் வள்ளலார் அறக்கட்டளையின் நேசம்
/
ரூ.35 லட்சத்தில் சுகாதார நிலையம் வள்ளலார் அறக்கட்டளையின் நேசம்
ரூ.35 லட்சத்தில் சுகாதார நிலையம் வள்ளலார் அறக்கட்டளையின் நேசம்
ரூ.35 லட்சத்தில் சுகாதார நிலையம் வள்ளலார் அறக்கட்டளையின் நேசம்
ADDED : ஆக 31, 2025 12:51 AM

திருப்பூர் : சாமளாபுரத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், வள்ளலார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.
சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில், துணை ஆரம்ப சுகாதார மையம் பழைய கட்டடத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்தது. இந்த நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து, சாமளா புரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பள்ளி பாளையத்தில் செயல்படும் வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட அறக்கட்டளை நிர்வாகம், 35 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க முன் வந்தது. இதற்கான கட்டுமானப் பணிகள் உரிய அனுமதி பெற்றுத் துவங்கியது. பணிகள் முடிந்து திறப்பு விழா நடந்தது.
வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகி ராமச்சந்திரன் புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பேரூராட்சி துணை தலைவர் வரதராஜன், மருத்துவ அலுவலர் சுடர்விழி, சாந்தகுமாரி, கவுன்சிலர் மைதிலிபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்
முன்னதாக, அறக்கட்டளை சார்பில், 1வது வார்டு பகுதியில் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.

