/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசத்தின் முழக்கம் கேட்குதே... திசையெட்டும் திரும்பிப் பார்க்குதே!
/
தேசத்தின் முழக்கம் கேட்குதே... திசையெட்டும் திரும்பிப் பார்க்குதே!
தேசத்தின் முழக்கம் கேட்குதே... திசையெட்டும் திரும்பிப் பார்க்குதே!
தேசத்தின் முழக்கம் கேட்குதே... திசையெட்டும் திரும்பிப் பார்க்குதே!
ADDED : ஆக 14, 2025 09:32 PM

தேசப்பற்றை நெஞ்சில் சுமந்து, கம்பீர அணிவகுப்பு நிகழ்த்தும் முப்படை வீரர்களைக் காணும்போது, நெஞ்சு சிலிர்த்துப்போகும். ஆம்; ஆண்டுதோறும், குடியரசு தினத்தன்று, டில்லி செங்கோட்டை மற்றும் சென்னை மெரினாவில் முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெறும். தேச விடுதலையின் வெற்றி முழக்கமாகவே இது பார்க்கப்படுகிறது; சுதந்திர தினத்தன்று, என்.எஸ்.எஸ்., மாணவர்கள், பார்வையாளர்களாக அழைக்கப்படுவதுண்டு.
டெல்லி மற்றும் சென்னையில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கல்லுாரிகளில் பயிலும் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கும் கிடைப்பதுண்டு. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு- 2 மாணவர்களில் ஒருவரான, பூபாலன் என்பவர், 2022ல், டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அனுபவத்தை பகிர்ந்தார்:அணிவகுத்து நடந்து செல்லும் திறமை, கலைநிகழ்ச்சியில் பங்கெடுக்கும் திறமை மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தான், மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். முதலில், கல்லுாரி அளவில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு இடையே தேர்வு நடைபெறும். அதில் தேர்வான பின், பல்கலை அளவில் உள்ள கல்லுாரிகளுக்கு இடையேயான தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெற்ற பின், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய, தென்மண்டல அளவில் நடைபெறும் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாறுபட்ட அனுபவம்
நான் கல்லுாரி, பல்கலை அளவில் தேர்ச்சி பெற்று, கர்நாடகாவின் பெங்களுரூவில், 10 நாள் தங்கி பயிற்சி பெற்று திறமையை வெளிக்காட்டினேன். அங்கு தேர்ச்சி பெற்ற என்னை, டெல்லி அழைத்துச் சென்று, ஒரு மாதம் தங்க வைத்து பயிற்சி வழங்கினார்கள். புதிய ஊர், புதிய மனிதர்கள், மாறுபட்ட காலநிலை, வெவ்வேறு கலாசாரம் கொண்ட பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள் என, முற்றிலும் மாறுபட்ட அனுபவம் கிடைத்தது.
வீரம் செறிந்த அணிவகுப்பு
தொடர் பயிற்சி மற்றும் முயற்சியின் பலனாக, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தகுதி பெற்றேன். அணிவகுப்பில் எங்களுக்கு முன் நடந்து செல்லும், முப்படை ராணுவ வீரர்களின் மிடுக்கான உடை, நடை, கம்பீரம் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, அவர்களுக்கு நிகராக நாமும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே தோன்றும். வீரம் செறிந்த அந்த அணிவகுப்பை நிறைவு செய்த பின், நாமும் ராணுவத்தில் இணைந்து தேசத்துக்காக பணியாற்ற வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது.தென் மண்டல மற்றும் தேசிய அளவிலான பயிற்சியின் போது, அதிகாலை யோகா பயிற்சி துவங்கி உடற்பயிற்சி, சரியான நேரத்துக்கு உணவு, நேரம் தவறாமை உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
---