/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசரண் மருத்துவமனையில் இருதய தின விழிப்புணர்வு
/
ஸ்ரீசரண் மருத்துவமனையில் இருதய தின விழிப்புணர்வு
ADDED : அக் 01, 2025 12:12 AM

திருப்பூர்; உலக இருதய தினத்தை முன்னிட்டு, போயம்பாளையம், ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர், கே.எம்.சி. பப்ளிக் பள்ளி இணைந்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக சி.பி.ஆர். பயிற்சியை வழங்கியது.
டாக்டர் நந்தகுமார் செல்வம், இருதய பராமரிப்பு, வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்கள், சி.பி.ஆர். செய்வதன் அவசியம், குறித்து விளக்கப்பட்டது. ஸ்ரீ சரண் மருத்துவமனையின் மருத்துவர் குழு, கே.எம்.சி. பப்ளிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இருதய ஆரோக்கிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக, சமூக ஆரோக்கியத்திற்கான எங்கள் மருத்துவமனையின் பணி தொடரும் என்று மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பழனிசாமி தெரிவித்தார்.