ADDED : ஜூன் 26, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதன் காரணமாக, சமீப நாட்களாக, மழை பெய்து வருகிறது. பல்லடம் வட்டாரத்தில், அடிக்கடி காலநிலை மாறுவதால், திடீரென வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக உள்ளது. இதற்கிடையே, பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று மதியம், திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், சாரல் மழையில் நனைந்த படியே சென்றனர். ஒரு மணி நேரம் சாரல் மழை நீடித்தது. இதன் காரணமாக, பல்லடம் பகுதியில், நேற்று, குளிர்ச்சியான காலநிலை நிலவியது.