/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழநி ரோட்டில் கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
பழநி ரோட்டில் கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஏப் 10, 2025 09:53 PM
உடுமலை, ; உடுமலை - பழநி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கனரக வாகனங்களால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலை, பழநி ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி நடக்கும் பகுதி மற்றும் பழநி செல்லும் வழித்தடத்தில், கிரேன், பொக்லைன் மற்றும் லாரிகள் அதிகளவு ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
அதே போல், தனியார் வணிக வளாகம், சந்தை பகுதியில், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, இந்த ரோட்டில் இரு புறமும் மழை நீர் வடிகால் அமைத்து, மண் அகற்றப்படாமல், மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான ரோடு குறுகலாக மாறி, விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து போலீசார் பணியில் உள்ள நிலையில், இந்த ஆக்கிரமிப்பு வாகனங்கள் குறித்து கண்டு கொள்ளாமல், பொதுமக்களை நிறுத்தி, வாகன விதி மீறல் வழக்கு, வசூல் என 'பிசி' யாக இருக்கின்றனர்.
எனவே, பிரதான போக்குவரத்து ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.