ADDED : ஜூலை 14, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், கல்லம்பாளையம் பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த ஏராளமான தகர ெஷட் வீடுகள் தரை மட்டமாகின.அங்கு வசித்தவர்கள் தங்கள் பொருட்களை இழந்து தவிப்புக்குள்ளாகினர்.
அவர்களுக்கு உதவும் வகையில், திருப்பூர் மாவட்ட 'ஏர் கண்டிசனிங் ரெப்பிஜ்ரேசன் அசோசியேசன்' சார்பில், தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், உப தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் இவற்றை நேற்று வழங்கினர்.

