/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உண்டு உறைவிடப்பள்ளியில் கழிப்பறை புதுப்பிக்க உதவி
/
உண்டு உறைவிடப்பள்ளியில் கழிப்பறை புதுப்பிக்க உதவி
ADDED : ஜன 14, 2025 09:18 PM
உடுமலை:
திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளியில் கழிப்பறைகள் புதுபிக்கப்பட்டன.
உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளியில், 100க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் கழிப்பறை நீண்ட காலமாக போதிய பராமரிபில்லாத நிலையில் இருந்தது.
திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் சார்பில், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறைகள் புதுபிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை நிறுவனத் தலைவர் லீலாஜெகன், செயலாளர் சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.