/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் மூலிகை தோட்டம்
/
அரசு கலைக்கல்லுாரியில் மூலிகை தோட்டம்
ADDED : மார் 21, 2025 10:20 PM

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மூலிகைத் தோட்டம் துவக்க விழா நடந்தது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கல்லுாரி பேராசிரியர்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி உட்பட பல்வேறு தன்னார்வல அமைப்புகளின் சார்பில், மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நேற்று நடந்தது. துவக்க விழாவில் கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம், கோவை கே.பி.ஆர்., கல்லுாரி தேசிய மாணவர் படை அதிகாரி ஸ்ரீதர், வரையாடுகள் பாதுகாப்பு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் முன்னிலை வகித்தனர்.
தோட்டத்தில் வில்வம், மலைவேம்பு, துளசி, கொடுவெலி உட்பட 338 வகையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லுாரி தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வி துறையின் சார்பில் தோட்டம் பராமரிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பு தன்னார்வலர்கள், பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வித்துறை மற்றும் தேசிய மாணவர் படையினர் செய்திருந்தனர்.