/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., கல்லுாரியில் பாரம்பரிய கண்காட்சி
/
ஏ.வி.பி., கல்லுாரியில் பாரம்பரிய கண்காட்சி
ADDED : ஜூலை 18, 2025 11:32 PM

திருப்பூர்; ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் பயன்பாட்டு துறையினரால், இந்தியர்களின் கலை மற்றும் விளையாட்டு பாரம்பரிய உணவு முறைகள், பண்பாடு மற்றும் கலாசாரங்கள் தொடர்பான கண்காட்சி நடத்தப்பட்டது.
அத்துறை சார்ந்த மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிக்காட்டினர். சிலம்பம், பாரம்பரிய நடனம், நாணய சேகரிப்பு, பண்டைய கால சமையலறை பொருட்கள், பண்டைய கால விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி மற்றும் ஐந்துகல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கண்காட்சியில், 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியை, துறை தலைவர் அகிலா மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் கதிரேசன் மற்றும் கல்லுாரி டீன் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.