/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதார் ஓ.டி.பி., பெற ஐகோர்ட் தடை; தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்
/
ஆதார் ஓ.டி.பி., பெற ஐகோர்ட் தடை; தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்
ஆதார் ஓ.டி.பி., பெற ஐகோர்ட் தடை; தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்
ஆதார் ஓ.டி.பி., பெற ஐகோர்ட் தடை; தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்
ADDED : ஜூலை 21, 2025 11:40 PM
திருப்பூர்; தி.மு.க., வில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு நடக்கும் பணிகளைதற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கடந்த 15ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அனைத்து ஓட்டுச்சாவடி அடிப்படையில், அங்குள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 30 சதவீதம் பேரை தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேர்ப்பதே திட்டம்.
இதற்காக, அனைத்து பகுதியிலும் பூத் வாரியாக குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவினர் தங்கள் பூத்துக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசி, கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
கட்சியில் இணைக்கப்பட்டோர் மொபைல் போன் எண்ணைப் பெற்று, அதன் வாயிலாக மென்பொருள் செயலியில் ஓ.டி.பி.,பெற்று உறுப்பினர் சேர்க்கை உறுதிப் படுத்தப்பட்டது.
இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். திருபுவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுரை கிளைஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில், நேற்று உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால், தி.மு.க., தலைமை உறுப்பினர் சேர்க்கை பணிகளை நிறுத்திவைக்க கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், பூத் கமிட்டி நிர்வாகிளுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஓ.டி.பி., நடைமுறையில் மாற்று ஏற்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை தற்காலிகமாக,இப்பணியை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.