/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐகோர்ட் உத்தரவிட்டும் பயனில்லை... கரைப்புதுாரில் குப்பை அகற்றவில்லை!
/
ஐகோர்ட் உத்தரவிட்டும் பயனில்லை... கரைப்புதுாரில் குப்பை அகற்றவில்லை!
ஐகோர்ட் உத்தரவிட்டும் பயனில்லை... கரைப்புதுாரில் குப்பை அகற்றவில்லை!
ஐகோர்ட் உத்தரவிட்டும் பயனில்லை... கரைப்புதுாரில் குப்பை அகற்றவில்லை!
ADDED : டிச 11, 2024 05:00 AM
பல்லடம்; கோர்ட் உத்தரவிட்ட பின்னும், மலைக்குன்று போல் குவிந்துள்ள கழிவுகள் குப்பைகளை அகற்ற இயலாமல், கரைப்புதுார் ஊராட்சி திணறி வருகிறது.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், பேரூராட்சிக்கு இணையான மக்கள் தொகை கொண்டது. இங்கு குப்பை மற்றும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த போதிய கட்டமைப்பு வசதிகள் கிடையாது.
இதனால், ஒட்டுமொத்த கழிவுகளும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி எல்லைப் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், குப்பைகள், கழிவுகளால் இப்பகுதியில் பெரிய மலைக்குன்று உருவாகியுள்ளது.
பொதுமக்களை பாதிக்கும் குப்பைகள் கழிவுகளை அகற்ற வேண்டும் என, பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். விசாரணை மேற்கொண்ட ஐகோர்ட், எட்டு வார காலத்துக்குள் குப்பைகள் கழிவுகளை அகற்ற வேண்டும் என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு உத்தரவிட்டது. கோர்ட் விதித்த காலக்கெடு முடிந்து பல நாட்கள் ஆகியும், குப்பைகளால் உருவான மலைக்குன்று இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
அப்பகுதியினர் கூறியதாவது:
பல ஆண்டுகளாக இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான டன் குப்பைகள், கழிவுகள் இங்கு தேங்கி உள்ளன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான துர்நாற்றத்தை சந்திக்கின்றனர். அருகில் வசிப்பவர்களுக்கு, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது.
நீர் நிலையையும், அதற்கு தண்ணீர் செல்லும் வழிகளையும் குப்பை அடைத்துள்ள. திடக்கழிவு மேலாண்மை, கரைப்புதுார் ஊராட்சியில் முற்றிலும் பின்பற்றப்படுவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். ஐகோர்ட் உத்தரவிட்டும் கழிவுகள் குப்பைகளை அகற்றாதது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.