/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயரம் தாண்டுதல் போட்டி; 'பிரன்ட்லைன்' மாணவி தேர்வு
/
உயரம் தாண்டுதல் போட்டி; 'பிரன்ட்லைன்' மாணவி தேர்வு
உயரம் தாண்டுதல் போட்டி; 'பிரன்ட்லைன்' மாணவி தேர்வு
உயரம் தாண்டுதல் போட்டி; 'பிரன்ட்லைன்' மாணவி தேர்வு
ADDED : செப் 23, 2024 11:28 PM

திருப்பூர் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான 6வது கிளஸ்டர் விளையாட்டு போட்டிகள், அரக்கோணம், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரியில் நடைபெற்றது. இதில், திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி, பிளஸ் 2 வகுப்பு மாணவி, பவித்ரலட்சுமி, 19 வயது பிரிவில், உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதனால், அவர் வாரணாசியில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
பதக்கம் பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நந்தகுமார், ராஜலட்சுமி ஆகியோரை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.