/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்மட்ட பாலம் பணிகள் ஆய்வு சிறப்பு குழு நடவடிக்கை
/
உயர்மட்ட பாலம் பணிகள் ஆய்வு சிறப்பு குழு நடவடிக்கை
உயர்மட்ட பாலம் பணிகள் ஆய்வு சிறப்பு குழு நடவடிக்கை
உயர்மட்ட பாலம் பணிகள் ஆய்வு சிறப்பு குழு நடவடிக்கை
ADDED : மே 13, 2025 11:20 PM

உடுமலை,; நபார்டு திட்டத்தின் கீழ், துங்காவி - மடத்துக்குளம் ரோட்டில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலம் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும், நெடுஞ்சாலைத்துறையின் கீழ், நிறைவு செய்யப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பணிகளை, ஆய்வு செய்ய அத்துறை அதிகாரிகளை கொண்ட உள்தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பணியிடத்தில், தரப்பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், நபார்டு மற்றும் கிராம சாலை திட்டம் கோவை கோட்டத்தில், 75 தரைமட்ட பாலங்கள், உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், துங்காவி - மடத்துக்குளம் ரோட்டில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் தலைமையிலான குழுவினர், பாலத்தின் ஓடுதள தரம், அளவீடுகள் மற்றும் பாலம் கட்டுமான பணிகளின் அளவீடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ், நபார்டு மற்றும் கிராம சாலை திட்ட கோவை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.