/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிவேக டிப்பர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
/
அதிவேக டிப்பர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
ADDED : நவ 21, 2025 06:34 AM

பல்லடம்: பல்லடம் அருகே, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
பல்லடம் அருகே, அவிநாசிபாளையத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று, நேற்று காலை, கோவை அருகேயுள்ள தொண்டாமுத்துார் நோக்கி புறப்பட்டது.
பல்லடத்தை அடுத்த, கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில், லாரியில் இருந்த ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி விழுந்தன.
விபத்தில் லாரி டிரைவர் காயங்களுடன் தப்பினார். இதேபோல், விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான லாரி அகற்றப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், தேசிய நெடுஞ்சாலையில், வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பேரிகார்டுகளுக்குள் புகுந்து, அதே வேகத்தில் செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது,' என்றனர்.

