/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிட்டெக் - 2026' கண்காட்சி அரங்கு அமைக்க பூமி பூஜை
/
'நிட்டெக் - 2026' கண்காட்சி அரங்கு அமைக்க பூமி பூஜை
'நிட்டெக் - 2026' கண்காட்சி அரங்கு அமைக்க பூமி பூஜை
'நிட்டெக் - 2026' கண்காட்சி அரங்கு அமைக்க பூமி பூஜை
ADDED : நவ 21, 2025 06:34 AM

திருப்பூர்: திருப்பூரின் மிகப்பெரிய பின்னலாடை கண்காட்சியான நிட்டெக் 2026 கண்காட் சி வரும் மார்ச் 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை மூன்று நாள் நடைபெறவுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கண்காட்சியில், பல்வேறு உலக நாடுகளிலிருந்தும், உள்நாட்டில் இருந்தும், 200க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர். 350க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது.
திருமுருகன் பூண்டி ரிங் ரோட்டில் ைஹடெக் இண்டர்நேஷனல் வளாகத்தில் இக்கண்காட்சி நடக்கிறது. கண்காட்சி அரங்குகள் அமைப்பதற்கான பூமி பூஜை, ஹைடெக் திருப்பூர் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கண்காட்சி தலைவர் ராயப்பன், துணை தலைவர் சிபி சக்ரவர்த்தி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.