/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டம்; பின்னணி குறித்து போலீசார் விசாரணை
/
அரசு பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டம்; பின்னணி குறித்து போலீசார் விசாரணை
அரசு பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டம்; பின்னணி குறித்து போலீசார் விசாரணை
அரசு பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டம்; பின்னணி குறித்து போலீசார் விசாரணை
ADDED : நவ 21, 2025 06:34 AM
திருப்பூர்: திருப்பூரில், தலைமையாசிரியர் மீது குற்றம்சாட்டி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதின் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளியில், தேர்வையொட்டி சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி தலைமையாசிரியர் திட்டமிட்டு அறிவித்தார். ஆனால், இரு நாட்களாக மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு செல்லாமல், கிளம்பி சென்று விட்டனர்.
இந்நிலையில், சிறப்பு வகுப்பு நடத்த கூடாது என்றும் தலைமையாசிரியர் மீது குற்றம்சாட்டி மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி டவுன்ஹாலில் கும்பலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற கொங்கு நகர் உதவி கமிஷனர் கணேஷ் தலைமையிலான போலீசார் மாணவர்களை டவுன்ஹால் அரங்கில் அமர வைத்து பேச்சு நடத்தினர். அதன்பின், சி.இ.ஓ. காளிமுத்து மாணவர்களிடம் பேச்சு நடத்தி, இதுதொடர்பாக விசாரிப்பதாக தெரிவித்தனர். பின், அனைத்து மாணவர்களும் வேனில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர்.
மாணவர்களால், குற்றம்சாட்டப்பட்ட தலைமையாசிரியர் குறித்து, உளவு பிரிவு போலீசார் விசாரித்தனர். அவர் கடந்த, நான்கு மாதமாக இப்பள்ளியில் பணி செய்து வருகிறார். இதற்கு முன், அவர் பணிபுரிந்த பள்ளியில் அவரின் நடவடிக்கை நன்றாக இருந்ததும் தெரியவந்தது. ஆனாலும், தற்போது மாணவர்கள் போராட்டம் எப்படி நடந்தது என்றும், பள்ளியில் உள்ள வேறு ஆசிரியர்கள் யாராவது துாண்டி விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் கர்னலிடம் கேட்டதற்கு, ''தேர்வுகள் நடக்க உள்ளதால், அதற்கு அவர்களை தயார்படுத்தும் வகையில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. குறிப்பாக, அவர்கள் மீது உள்ள அக்கறை மட்டுமே. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான கண்டிப்பு மற்றும் அறிவுரை மட்டுமே செய்யப்பட்டது. வேறு எதுவுமில்லை,'' என்றார்.
மாணவர்கள் மோதல் திருப்பூர் குமார் நகரை சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, இரு தரப்பினரும், குமார் நகரில் திரண்டனர். அதில், சில மாணவர்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வலம் வந்தனர்.
மக்கள் முன்னிலையில், கைகளில் தாக்கி கொண்டனர். தகவலறிந்து சென்ற போலீஸ் ரோந்து வாகனத்தை கண்டு, மாணவர்கள் சிதறி ஓடினர். பொது இடத்தில், ஒழுங்கீனமாக தொடர்ந்து நடந்து வரும் மாணவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

