ADDED : செப் 27, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ேஹமலதா தலைமை வகித்தார். திட்ட அலுவலர் தாரணி முன்னிலை வகித்தார். அனைத்து துறை தலைவர்களும் பங்கேற்று உயர் கல்வியின் சிறப்பு, வேலை வாய்ப்பு, மேற்படிப்புக்கு வழி, கல்வி உதவித்தொகை திட்டம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அவிநாசி வட்டார கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுந்தர்ராஜன், ஆசிரியர் பயிற்றுநர் அமுதா மற்றும் வட்டார மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் உயர்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மேற்படிப்புக்காக அரசின் நலத்திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.