/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை விரிவாக்கம்: உயரதிகாரி ஆய்வு
/
நெடுஞ்சாலை விரிவாக்கம்: உயரதிகாரி ஆய்வு
ADDED : நவ 03, 2025 11:55 PM
திருப்பூர்:  அவிநாசியில் இருந்து கருவலுார், அன்னுார், பொகலுார் வழியாக, மேட்டுப்பாளையத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதற்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன; மரங்கள் வெட்டப்பட்டன.
வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக விரிவுப்படுத்தப்பட்ட சாலையின் ஓரங்களிலும், மையத்தடுப்பிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியும் நடந்து வருகிறது.சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் தலா 10 மீ., அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலை பணியின் தரத்தை சென்னை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். அன்னுார் - அவிநாசி சாலையில் ஊத்துப்பாளையத்தில், மைய தடுப்பிலிருந்து இருபுறமும் சாலையின் அகலம் அளக்கப்பட்டது. சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவர், 'நான்கு வழிச்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும்,' என்று அறிவுறுத்தினார்.

