/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர புதர் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
/
ரோட்டோர புதர் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
ரோட்டோர புதர் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
ரோட்டோர புதர் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
ADDED : மார் 21, 2025 10:11 PM

உடுமலை; தளி-குமரலிங்கம் ரோட்டில், ரோட்டோர புதர்களை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், தளி-குமரலிங்கம் ரோடு பராமரிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில், 15க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள புதர்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், ரோட்டோர புதர்கள் அகற்றும் பணி, 'பிரஷ் கட்டர்' இயந்திரம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. அடுத்தபடியாக தாராபுரம் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து ரோடுகளிலும், ரோட்டோர புதர்கள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.