/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர புதர் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
/
ரோட்டோர புதர் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
ADDED : டிச 26, 2024 10:24 PM

உடுமலை, ; பருவமழைக்கு பின், ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள செடி, புதர்களை அகற்றும் பணி மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மற்றும் பிற ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழைக்கு பின், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில் செடிகள், புதர்கள் அதிகரித்து, வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோர செடிகளை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், 29வது கி.மீ.,ல் இருந்து, இயந்திரம் வாயிலாக, புதர்கள் அகற்றப்படுகிறது. அடுத்தபடியாக, மாவட்ட முக்கிய ரோடுகளிலும், புதர் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும், என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.