ADDED : டிச 16, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், தாராபுரம் சாலை, அரசு மருத்துவக் கல்லுாரி பஸ் ஸ்டாப் முன்புறம் தார் ரோடு, கால்வாய் உயரம் இரண்டும் ஒரே அளவுக்கு மாறியுள்ளது.
மழை பெய்யாவிட்டாலும், கழிவுநீர் கால்வாயில் தேங்கினாலே, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் முன் கழிவுநீர் வழிந்தோடுகிறது. புறநோயாளிகள் பிரிவுக்கு வருவோர், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கழிவுநீரை மிதித்த படியே மருத்துவமனை வளாகத்துக்குள் வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதங்கள் அனுப்பியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.

