/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகத்தடைக்கு குறியீடு அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
/
வேகத்தடைக்கு குறியீடு அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
வேகத்தடைக்கு குறியீடு அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
வேகத்தடைக்கு குறியீடு அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
ADDED : அக் 15, 2025 11:48 PM

உடுமலை: கொழுமம் ரோட்டில் வேகத்தடைகளுக்கு குறியீடுகள் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலையில் இருந்து கொழுமம் வழியாக பழநி செல்லும் ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. பழமையான கோவில்கள் இவ்வழித்தடத்தில், அமைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த ரோட்டில், அதிகளவு கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், புதிதாகவும், ஏற்கனவே உள்ள வேகத்தடைகள் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அப்பகுதிகளில், வேகத்தடை இருப்பது குறித்து தெரியும் வகையில், வெள்ளைக்கோடு அமைத்தல் மற்றும் இதர குறியீடுகள் அமைக்கும் பணி, தற்போது நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.