/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழந்த பசுமையை மீட்ட நெடுஞ்சாலைத்துறை
/
இழந்த பசுமையை மீட்ட நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஏப் 26, 2025 11:49 PM

பொங்கலுார்: அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரையிலான, 69 கி.மீ., துாரமுள்ள ரோடு மாநில நெடுஞ்சாலையாக இருந்தது. இரு வழிச்சாலையாக இருந்த ரோடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.
இப்பணிக்காக, வழிநெடுகிலும் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. நெடுஞ்சாலை துறை வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்களை நட்டது. அவை தற்போது நன்கு செழித்து வளர்ந்து, பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை இழந்த பசுமையை மீட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அந்த மரங்கள் பெரும் விருட்சமாக உருவெடுக்கும். ஆனால், ரோட்டோரத்தில் மின்  கம்பங்கள் நடப்படுவதால் மரங்களின் கிளைகள் அடிக்கடி வெட்டப்படும்.
இதனால், அவை போன்சாய் மரங்களைப் போல சிறு செடிகளாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின் கம்பிகளை கேபிள்களாக மாற்றினால் மரக்கிளைகளை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

