/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து பாதுகாப்பு மாநாடு; ஹிந்து முன்னணி மும்முரம்
/
ஹிந்து பாதுகாப்பு மாநாடு; ஹிந்து முன்னணி மும்முரம்
ஹிந்து பாதுகாப்பு மாநாடு; ஹிந்து முன்னணி மும்முரம்
ஹிந்து பாதுகாப்பு மாநாடு; ஹிந்து முன்னணி மும்முரம்
ADDED : ஜன 19, 2024 04:32 AM
திருப்பூர் : ஹிந்து முன்னணி நடத்தும் ஹிந்துக்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஹிந்து முன்னணி சார்பில், ஹிந்துக்கள் பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் பிரமாண்டமான மாநாடு நடத்தப்படவுள்ளது. வரும், 26ம் தேதி, ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் இந்த மாநாடு நடக்கிறது.இதற்கான ஏற்பாட்டினை ஹிந்து முன்னணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த மாநாடு குறித்த தகவல் பொதுமக்களைச் சென்று சேரும் வகையில், பல்வேறு வகையில் விளம்பரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாநாடு குறித்த சுவர் விளம்பரங்கள் எழுதும் பணி தற்போது திருப்பூரில் நடந்து வருகிறது. பொதுமக்கள் பார்வையில் படும் வகையில், இவ்விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது.