ADDED : ஜன 24, 2024 11:34 PM
திருப்பூர்:ஹிந்து முன்னணி, திருப்பூர் - கோவை கோட்டம் சார்பில், ஹிந்துக்கள் பாதுகாப்பு மாநாடு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் நாளை, 26ம் தேதி மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில், தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில பொது செயலர் முருகானந்தம், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொது செயலர் கிஷோர்குமார், மாநில செயலர்கள் செந்தில்குமார், சேவுகன், சண்முகம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, மாநில செயலர் செந்தில்குமார் கூறியதாவது:
தமிழக அரசின் ஹிந்து விரோத நடவடிக்கைகளால், ஹிந்து கோவில்கள் மீது பலவிதமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஹிந்து மதத்தை சீர்குலைக்கும் தீய எண்ணத்தோடு, சனாதன ஹிந்து தர்மத்துக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய ஹிந்து விரோத செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த பாதுகாப்பு மாநாடு நடக்கிறது. மாநாட்டில், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.