/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து கடவுள் அவமதிப்பு ; புத்தக கண்காட்சி முற்றுகை
/
ஹிந்து கடவுள் அவமதிப்பு ; புத்தக கண்காட்சி முற்றுகை
ஹிந்து கடவுள் அவமதிப்பு ; புத்தக கண்காட்சி முற்றுகை
ஹிந்து கடவுள் அவமதிப்பு ; புத்தக கண்காட்சி முற்றுகை
ADDED : டிச 08, 2025 05:03 AM

பல்லடம்: ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டதை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் புத்தக கண்காட்சியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஒரு புத்தக கடையில், 'திராவிடர் தளம்' என்ற பெயரில், ஹிந்து கடவுள்களையும், கலாசாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக நோட்டீஸ் வினியோகித்ததாக கூறி, புத்தக கண்காட்சியை ஹிந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே, தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட புத்தக கடை உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். கண்காட்சி நிர்வாகிகள், பிரச்னைக்குரிய புத்தக கடையை காலி செய்து கொள்ளுமாறு கூறினர்.
இதனால், கண்காட்சி வளாகத்தில் சலசலப்பு நிலவியது. ஹிந்து அமைப்பினரின் புகாரையடுத்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

