/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய உரம் பதுக்கல்; சிறப்புக்குழு விசாரணை
/
மானிய உரம் பதுக்கல்; சிறப்புக்குழு விசாரணை
ADDED : டிச 28, 2024 06:38 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே அத்தாம்பாளையத்தில் உள்ள நுால் மில் கிடங்கில் இருந்து, மானிய விலையிலான, தலா 45 கிலோ எடையுள்ள, 3,210 யூரியா மூட்டைகளை (144 டன்) வேளாண் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மில் உரிமையாளர் ரமேஷ், அவரது சகோதரர் தாமரைக்கண்ணன் ஆகியோர், மானிய விலை உரத்தை முறைகேடாக வாங்கி, வேறு பெயரில் பேக்கிங் செய்து, கேரளாவில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.
கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது,''அறிக்கை சமர்ப்பித்ததும், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு குழு அமைத்து, தீவிர விசாரணை நடத்தி, மேல்நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

