/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹாக்கி பயிற்சிக்கு வசதி ஏற்படுத்தணும்! விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
ஹாக்கி பயிற்சிக்கு வசதி ஏற்படுத்தணும்! விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ஹாக்கி பயிற்சிக்கு வசதி ஏற்படுத்தணும்! விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ஹாக்கி பயிற்சிக்கு வசதி ஏற்படுத்தணும்! விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 14, 2025 09:23 PM
உடுமலை:
'பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஹாக்கி பயிற்சிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்,' என, விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு சொந்தமான மைதானம் ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில், 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
பள்ளியிலிருந்து சற்று தள்ளி, அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு மாணவர்கள், வந்து செல்வது சிரமமாக இருப்பதால், பள்ளி வளாகத்திலுள்ள மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
பெதப்பம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி, அரசு கலைக்கல்லுாரியில், படிக்கும் மாணவர்கள், ஹாக்கி விளையாட்டில், தனியிடம் பிடித்து வருகின்றனர்.
அதிகளவு மாணவர்கள், மாநில, மாவட்ட அளவிலான அணிகளுக்கு தேர்வு பெற்று விளையாடி வருகின்றனர். குறுமைய அளவிலான போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து, விளையாட்டில் சாதிக்கும் இம்மாணவர்களை ஊக்குவிக்கவும், போதுமான பயிற்சி கிடைக்கவும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், காலை நேரங்களில், நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இருப்பினும், மைதானத்தை துாய்மைப்படுத்துவது மற்றும் பராமரிப்பதில், சிக்கல் உள்ளது. எனவே, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், ஹாக்கி பயிற்சிக்கான கட்டமைப்பு வசதிகளை மைதானத்தில் ஏற்படுத்த வேண்டும்.
இதனால், மைதானம் முறையாக பராமரிக்கப்படுவதுடன், கிராமப்புற மாணவர்கள், விளையாட்டில் சாதிக்கவும் உறுதுணையாக இருக்கும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.