/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹாக்கி உலக கோப்பை: உற்சாக வரவேற்பு
/
ஹாக்கி உலக கோப்பை: உற்சாக வரவேற்பு
ADDED : நவ 20, 2025 05:45 AM

உடுமலை: உடுமலையில், ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க, மலர் தூவி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் வரும், நவ., 28 முதல் டிச., 10 வரை சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடக்கிறது.
உலகின் தலைசிறந்த, 24 அணிகள் பங்கேற்கும், இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன.
உலக கோப்பை ஹாக்கி போட்டி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உலக கோப்பை வலம் வருகிறது.
இதனை, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் துவக்கி வைத்த நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரிக்கு நேற்று உலக கோப்பை கொண்டு வரப்பட்டது.
பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் தூவி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும் உலக கோப்பை மற்றும் இந்த போட்டிக்கான 'லோகோ' வான காங்கேயன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் , அமைச்சர் சாமிநாதன், மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே, பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள், வீரர்கள் பங்கேற்றனர்.

