/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குப்பை பிரச்னையில் நடவடிக்கை இல்லாவிட்டால் போராட்டம்' திருப்பூர் இ.கம்யூ. எம்.பி. அறிவிப்பு
/
'குப்பை பிரச்னையில் நடவடிக்கை இல்லாவிட்டால் போராட்டம்' திருப்பூர் இ.கம்யூ. எம்.பி. அறிவிப்பு
'குப்பை பிரச்னையில் நடவடிக்கை இல்லாவிட்டால் போராட்டம்' திருப்பூர் இ.கம்யூ. எம்.பி. அறிவிப்பு
'குப்பை பிரச்னையில் நடவடிக்கை இல்லாவிட்டால் போராட்டம்' திருப்பூர் இ.கம்யூ. எம்.பி. அறிவிப்பு
ADDED : நவ 20, 2025 05:41 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், சரியான திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் இல்லை; குப்பை பிரச்னைக்கு ஆரம்பத்தில் இருந்தே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் (இ.கம்யூ.) குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
குப்பை பிரச்னை பெரிய விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இதுவரை, தமிழக முதல்வருக்கு மூன்று முறை கடிதம் எழுதியும், இந்த நிமிடம் வரை எவ்வித பதிலும் இல்லை. குப்பை பிரச்னைக்கு உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. திடக்கழிவு மேலாண்மை பணியை தனியார்மயம் செய்ததால், ஊழல் அதிகரிக்கிறது.
பரமசிவம்பாளையத்தில் குப்பை கொட்டிய பாறைக்குழி அமைந்துள்ள இடத்துக்கு சென்று பார்த்தோம். அங்கு யாருமே வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் சரியான பாதுகாப்பு செய்யவில்லை. அதற்கு பிறகுதான், குப்பை பிரச்னை வேகமெடுக்க துவங்கியது. தமிழக அரசு, திருப்பூர் மாநகராட்சி பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாதபட்சத்தில், கம்யூ. கட்சிகள் போராட்டத்தில் இறங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுவும் போராட்டமே! 'திருப்பூர் மாநகராட்சியில், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த பாலசுப்ரமணியம் துணை மேயராக இருந்தும், குப்பை பிரச்னை தீர்க்கப்பட வில்லை; தீர்வு காணக்கோரி, கம்யூ., சார்பில் போராட்டமும் நடத்தவில்லையே,' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''பொதுமக்களுக்காக, கடிதம் வாயிலாக வலியுறுத்துவதும் ஒருவகை போராட்டம் தான். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் அளவுக்கு, துணை மேயருக்கு தனி அதிகாரம் கிடை யாது. இனியும் நடவடிக்கை இல்லையெனில், கம்யூ. கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என்று எம்.பி. சுப்பராயன் சமாளித்தார்.

