/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நில அளவை அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்தம்
/
நில அளவை அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : நவ 20, 2025 05:03 AM

திருப்பூர்: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தமுள்ள 98 நில அளவை அலுவலர்களில், 41 பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளான நேற்று, நில அளவை அலுவலர்கள், கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். கோமதி வரவேற்றார். கடந்த 1 ம் தேதி, மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 18 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்க, பணிகளை முறைப்படுத்த வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை திரும்பப்பெறவேண்டும். நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்' என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

