/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிக்கும் நகராட்சி: நல்லாறு பாதுகாப்பு அமைப்பினர் வேதனை
/
ஆக்கிரமிக்கும் நகராட்சி: நல்லாறு பாதுகாப்பு அமைப்பினர் வேதனை
ஆக்கிரமிக்கும் நகராட்சி: நல்லாறு பாதுகாப்பு அமைப்பினர் வேதனை
ஆக்கிரமிக்கும் நகராட்சி: நல்லாறு பாதுகாப்பு அமைப்பினர் வேதனை
ADDED : நவ 20, 2025 04:57 AM

நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியதாவது:
நல்லாற்றை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒத்துழைப்பு தர வேண்டிய திருமுருகன்பூண்டி நகராட்சியே ஆற்றை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகிறது.
நகராட்சி சார்பில், ஆற்றை ஆக்கிரமித்து, சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி வருகிறது.
இதற்கு நீர் வளத்துறை அனுமதியும் பெறவில்லை. கழிவு சுத்திகரிப்பு கட்டட பணியை நிறுத்தகோரி மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்துள்ளோம். அதுபோல், ஆற்றை ஆக்கிரமித்து, 24 லட்ச ரூபாய் மதிப்பில் வள மீட்பு மையம் நகராட்சி சார்பில், அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மின் இணைப்பு கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய பொதுப்பணி துறை அதிகாரிகள் நகராட்சி ஆக்கிரமிப்பு கட்டங்களை கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்ச மின்றி அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

