/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை அறிவிப்பு; பள்ளிகளில் வகுப்புகள்
/
விடுமுறை அறிவிப்பு; பள்ளிகளில் வகுப்புகள்
ADDED : டிச 13, 2024 11:03 PM

திருப்பூர்; மழையையொட்டிய விடுமுறை தாமத அறிவிப்பால் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் வழக்கம்போல் வகுப்புகள் நடந்தன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக திருப்பூரில் மழை ஓயவில்லை. மழையின் தீவிரத்தைப் பொறுத்து, பள்ளி, கல்லுாரிகளுக்கான விடுமுறை அறிவிப்பை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வந்த நிலையில், நேற்று, காலை, 7:30 மணியளவில்தான், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த அறிவிப்பில், 'கலெக்டர் அறிவிப்பு படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் பள்ளிகளில் நடத்தப்படக் கூடாது' என கூறப்பட்டிருந்தது.
திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பல தனியார் பள்ளிகளின் வாகனங்கள், காலை, 7:00 மணியில் இருந்தே மாணவர்களை அழைத்து செல்வதற்காக பள்ளிகளில் இருந்து கிளம்பி, தங்கள் வழித்தடத்தில் பயணிக்க துவங்கிவிட்டன; சில இடங்களில், காலை, 7:30 மணிக்கே அல்லது அதற்கு முன்போ, மாணவர்கள் பள்ளி பஸ்களில் ஏறியும் விடுகின்றனர்.பள்ளிக்கு வந்த மாணவர்களை திருப்பியனுப்ப முடியாமல், பல்வேறு பள்ளிகளில் வகுப்புகள் நடந்தன.
சில தனியார் பள்ளிகள், 6 முதல், 12ம் வகுப்பு வரையும், சில பள்ளிகள், பொதுத்தேர்வு 'ரிசல்ட்'டை மனதில் வைத்து, 9 முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரை வழக்கம் போல் பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு நடத்தினர்.