ADDED : ஏப் 03, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்லடம் அருகே, பருவாயை சேர்ந்த கல்லுாரி மாணவி வித்யா கொடூரமாக ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார். வித்யா தனது சொந்த அண்ணனால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த ஆணவ கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரே சாதியாக இருந்தாலும், காதலித்ததற்காக கொலை செய்யப்பட்டால் அதுவும் ஆணவ கொலைதான். தமிழக அரசு ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

