/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் வளம் மேம்பட 'கிடை' அமைத்தல்
/
மண் வளம் மேம்பட 'கிடை' அமைத்தல்
ADDED : ஏப் 28, 2025 10:57 PM
உடுமலை, ; உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, தொடர்ச்சியாக விளைநிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மண் வளம் பாதித்து, மகசூல் குறைவு உட்பட பிரச்னைகள் ஏற்படுகிறது.
மண் வளத்தை மேம்படுத்த தற்போது, விளைநிலங்களில், இரவு நேரங்களில் செம்மறியாடுகளை அடைக்கும் 'கிடை' போடுதல் முறையை, விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.
நுாற்றுக்கணக்கான செம்மறியாடுகளை, விளைநிலத்தில் அடைத்து வைப்பதால் அவற்றின் சாணம், சிறுநீர் மண்ணுக்கு பல்வேறு சத்துகளை தரும் உரமாகிறது.
களைச்செடிகள் முளைப்பதும் தவிர்க்கப்படுகிறது. இதற்காக, பிற மாவட்டங்களில், இருந்து செம்மறியாடுகளை ஓட்டி வரும், தொழிலாளர்களிடம் ஒப்பந்த முறையில், பேசி, விளைநிலங்களில், கிடை போடுகின்றனர்.
வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இத்தகைய முறையில் மண் வளத்தை மேம்படுத்த, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் இருப்பதால், பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள், இப்பகுதியில், மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

