/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோட்டக்கலைத்துறை திட்டங்கள்: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
/
தோட்டக்கலைத்துறை திட்டங்கள்: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
தோட்டக்கலைத்துறை திட்டங்கள்: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
தோட்டக்கலைத்துறை திட்டங்கள்: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 27, 2025 09:31 PM
உடுமலை; மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், விவசாயிகள் பயன்பெறலாம் என, உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் உமா சங்கரி கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை வாயிலாக, மத்திய, மாநில அரசுகளின், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து, காய்கறி சாகுபடி மேற்கொள்ள, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.3 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
தர்ப்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.24 ஆயிரம் மானியம் நாற்றுகளாகவும், இடு பொருட்களாகவும் வழங்கப்படுகிறது.
மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.24 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
முந்திரி பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.18 ஆயிரம், பன்னீர் ரோஸ் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.12 ஆயிரம், தென்னையில் ஊடுபயிராக, வாழை மற்றும் ஜாதிக்காய் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வாயிலாக, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.12 ஆயிரம், தென்னங்கன்றுகளாகவும், இடு பொருட்களாகவும் வழங்கப்படும்.
தென்னை மரங்களில், குறிப்பாக வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.1,775- மதிப்புள்ள மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி, ஒட்டுண்ணிகள் மற்றும் இறை விழுங்கிகள் மடத்துக்குளம் வட்டாரத்திற்கு 2,000 ஹெக்டேருக்கு முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களில், பயன் பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-- 2 , வங்கிக்கணக்கு நகல் ஆகியவற்றுடன், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆவணங்களை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களை பெற விரும்புவோர், துங்காவி உள்வட்ட உதவி தோட்டக்கலை அலுவலர், தாமோதரன், 96598 38787, மடத்துக்குளம் உள் வட்டம், உதவி தோட்டக்கலை அலுவலர், பூவிகா தேவி, 80720 09226 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.