/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நேரத்தில் 24 சடலங்கள் பாதுகாக்க மருத்துவமனையில் வசதி
/
ஒரே நேரத்தில் 24 சடலங்கள் பாதுகாக்க மருத்துவமனையில் வசதி
ஒரே நேரத்தில் 24 சடலங்கள் பாதுகாக்க மருத்துவமனையில் வசதி
ஒரே நேரத்தில் 24 சடலங்கள் பாதுகாக்க மருத்துவமனையில் வசதி
ADDED : மார் 18, 2024 12:30 AM

திருப்பூர்:திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திறக்கப்பட்ட பின், ஒவ்வொரு வார்டு சீரான வேகத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, நிர்வாக ரீதியாக கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்ட போது, பிரேத பரிசோதனைக்கூடத்தில், எட்டு முதல், பத்து சடலங்களை வைக்க வசதியிருந்தது; 'பிரீசர் பாக்ஸ்' மூன்று மட்டும் பயன்பாட்டில் இருந்தது.
மாவட்டத்தில் ஏதேனும் பெரிய விபத்து ஏற்பட்டு, ஒரே நேரத்தில், ஐந்துக்கும் அதிகமான சடலங்கள் வந்தால் அல்லது ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு ஒரே நாளில் அடுத்தடுத்த சடலங்கள் கொண்டு வந்தால், அடையாளம் காண வழியின்றி, நாள் கணக்கில் எடுத்துச் செல்லாமல் வைத்திருந்தால், தொடர்ந்து வரும் பிரேதங்களை வைக்க வழியில்லாத சூழல் நிலவியது.
கொரோனா காலத்தில் பெரும் இடநெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திறப்புக்கு பின், பிரேத பரிசோதனை அறை, உயிர் நீத்தார் கூடம் என பெயர் மாற்றப்பட்டு, விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு 20 முதல், 24 பிரேதங்களை ஒரே நேரத்தில் உள்ளே வைக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களை 'பிரீசர் பாக்ஸ்' மூலம் பாதுகாக்க முடியும். உடற்கூறாய்வு முடிந்து, பிரேதத்தை வாங்கி செல்வோர் காத்திருப்பதற்கு, அருகிலேயே ஓய்வறையும் கட்டப்பட்டுள்ளது.

