sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 எப்படி உதவிக்கு அழைக்க வேண்டும்?

/

 எப்படி உதவிக்கு அழைக்க வேண்டும்?

 எப்படி உதவிக்கு அழைக்க வேண்டும்?

 எப்படி உதவிக்கு அழைக்க வேண்டும்?


ADDED : பிப் 01, 2026 06:54 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆ பத்தின் விளிம்பில் ஒருவர் இருக்கும் போது, அவரை உயிர்காப்பாற்ற முன்வர வேண்டும்; இதே நிலை நமக்கும் வரலாம். எனவே, விபத்து நிகழ்ந்த இடத்தில் இயன்ற வரை உதவி செய்திட முன் வர வேண்டும்,' என, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் பேசிய, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில்,' மாவட்டத்தில், 32 இடங்களில், 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தினமும், நுாற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு, உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

பிரசவம், திடீர் நெஞ்சுவலி, விபத்தின் போது, ஏழு நிமிடத்தில் நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீரில் முழ்கியவர்; தீக்காயம் அடைந்தவர்; அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டவரை காப்பாற்ற நிறைய வழிகள் உள்ளது. குழந்தைகளுக்கு தனி ஆம்புலன்ஸ்களும், பைக் ஆம்புலன்ஸ்களும் உள்ளன. தேவைப்படும் போது மட்டும், 108 ஆம்புலன்ஸை அழைத்தால் பிறந்த குழந்தை முதல் எத்தனை வயதானவராக இருந்தாலும் தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்,' என்றனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கூறுகையில்,' தீ விபத்து நடந்தவுடன் எங்களுக்கு தகவல் வந்த மறுநொடியே நிகழ்விடத்துக்கு புறப்பட்டு விடுகிறோம். எனவே, தகவல் தருபவர்கள் உண்மையான, சரியான தகவலை தர வேண்டும்.

இடம் மிக முக்கியம். செல்வதற்கு தாமதம் ஏற்பட்டால், சென்று பயனில்லாமல் போய்விடும். திருப்பூர் தெற்கு, வடக்கு, மாவட்டம் முழுதும், எட்டுக்கு மேற்பட்ட தீயணைப்பு மீட்பு வாகனங்கள் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளன. வெள்ளம், பெரும் தீ விபத்து, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாக தீ விபத்துக்களை கூட எளிதில் எதிர்கொள்ளும் வகையிலான உபகரணங்கள் திருப்பூரில் உள்ளன,' என்றனர்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் இயங்கும் விதம், அளிக்கப்படும் முதலுதவி குறித்து பொதுமக்கள் மற்றும் டிரைவர்களுக்கு விரிவாகவிளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us