/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறு, சிறு தொழிலுக்கு தனி அமைப்பு தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
/
குறு, சிறு தொழிலுக்கு தனி அமைப்பு தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
குறு, சிறு தொழிலுக்கு தனி அமைப்பு தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
குறு, சிறு தொழிலுக்கு தனி அமைப்பு தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 01, 2026 06:54 AM
திருப்பூர்: எம்.எஸ்.எம்.இ. சீர்திருத்தம் செய்து, குறு, சிறு தொழில்களுக்கு தனி அமைப்பை உருவாக்க வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் வர்த்தகத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சகங்கள், தொழில் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
குறு, சிறு தொழில்கள், அரசு சலுகை திட்டங் களால் பயன்பெற வேண்டும்; அதிகபட்ச வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகமும் இயங்கி வருகிறது.
கடந்த பட்ஜெட்டின் போது (2025 - 26), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வகைப்பாடு திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி, 2.5 கோடி ரூபாய் வரையிலான முதலீடு மற்றும் 10 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் (டர்ன் ஓவர்) செய்தால் குறுந்தொழில் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.
முதலீடு, 25 கோடி ரூபாய் வரையும், மொத்த வர்த்தகம் 100 கோடி ரூபாய் வரை இருப்பது சிறு தொழில்; 125 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுடன், 500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்வது நடுத்தர தொழில் என்று மாற்றப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 'உத்யம்' போர்ட்டலில் பதிவு செய்தால், அரசு சலுகைகளை தடையின்றி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மொத்த ஒதுக்கீட்டில், நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் அதிகம் பயன்பெறுகின்றன; எதிர்பார்த்த அளவு, குறுந்தொழில்களுக்கு அரசு உதவி சென்றடைவதில்லை என்ற குறைபாடு இன்றும் தொடர்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையை வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
பனியன் தொழில்துறையினர் கூறுகையில், 'அரசு அறிவிக்கும் சலுகை அறிவிப்புகள், நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கு அதிகம் கிடைக்கிறது; குறுந்தொழில்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில்லை. குறுந்தொழில்கள் தான் இந்தியாவில் அதிகம் இயங்குகின்றன.
அரசு சலுகை அறிவிப்புகள், திட்டங்கள் தடையின்றி கிடைக்க ஏதுவாக, எம்.எஸ்.எம்.இ., துறையில், குறு மற்றும் சிறு தொழில்கள் துறை என்ற தனி அமைப்பை உருவாக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும்,' என்றனர்.

