தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாலிதீன் எப்படி ஒழிப்பது? நகராட்சிக்கு யோசனை

பாலிதீன் எப்படி ஒழிப்பது? நகராட்சிக்கு யோசனை

பாலிதீன் எப்படி ஒழிப்பது? நகராட்சிக்கு யோசனை


UPDATED : அக் 20, 2026 09:29 PM

ADDED : அக் 20, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 09:29 PM ADDED : அக் 20, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பாலிதீன் பைகளை எப்படி ஒழிப்பது என்பது குறித்து, பல்லடம் பகுதி வணிகர்கள், நகராட்சி கமிஷனருக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில், பல்லடம் பகுதி வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், நகராட்சி கமிஷனரை சந்தித்தனர். பல்லடம் வட்டார தலைவர் கண்ணையன், ஆலோசகர் அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பாலிதீன் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்தலாமே என, நகராட்சி கமிஷனர் அருள், வணிகர்களிடம் கோரிக்கை வைத்தார்.

வணிகர்கள் கூறுகையில், ‘பாலிதீன் பைகளை தவிர்ப்பதை காட்டிலும், அதன் உற்பத்தியை முழுமையாக நிறுத்தலாம். அது அதிகாரிகளான உங்கள் கையில் தான் உள்ளது. மேலும், நெகிழிப்பைக்கு மாற்று ஏற்படுத்த வேண்டும். துணிப் பைகளின் விலை அதிகம் என்பதால், மக்கள் அதை பயன்படுத்த மறைக்கின்றனர். எனவே, ஒரே ஒரு கையெழுத்து வாயிலாக, பாலிதீன் பைகளை முழுமையாக ஒழிப்பது உங்கள் கையில் தான் உள்ளது,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us